YMFE ஏற்பாட்டில் பாரிய சிரமதானமும் பயன்தரும் மர நடுகையும்
உமர் அரபாத்
UPDATED: Jun 8, 2024, 1:29:58 PM
2024 ம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் இளையோர் ஊடக மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ALSO READ | நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்பு.
ஏறாவூர் இளையோர் ஊடக மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான டீ.எம்.உமர் அறபாத் தலைமையில் ஏறாவூர் வாவிக்கரை பிரதேசத்தில் ஏறாவூர் நகரசபையுடன் இணைந்து பாரிய சிரமதான நிகழ்வு ஒன்று காலை 7 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளர் எம்.எச்.எம்.ஹமீம் கலந்து சிறப்பித்ததுடன் சுற்றுச்சூழலை நேசிக்கக்கூடிய பலரும் இச்சிரமதான பணியில் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சிரமதான நடவடிக்கையின் போது சூழலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் பொலித்தீன் பைகள்,பிளாஸ்டிக் போத்தல்கள் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஏறாவூரில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாலர் பாடசாலைகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் மாணவச் செல்வங்களின் சுற்றாடலுடன் தொடர்புபட்டகலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு