குவைத் நாட்டில் இயங்கி வரும் LB GROUP கல்விக்கு கரம் கொடுக்கும் திட்டம் பொல ன்னறுவையில்
Mohamed fazlan
UPDATED: Dec 15, 2024, 9:01:35 AM
குவைத் நாட்டில் இயங்கி வரும் LB GROUP ஒவ்வொரு வருட இறுதியிலும் பத்து பாடசாலைகளைத் தெரிவு செய்து அதிலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவது வழக்கமாகும்.
அவ்வகையில் இம்முறை குவைத் நாட்டில் இயங்கி வரும் LB GROUP அனுசரணையில் Polannaruwa கதுருவேல முஸ்லிம் கெளணி பகுதியில் உள்ள ஆக்ஸ்போர்ட் பாலர் பாடசாலையில் கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் தொனி பொருளின் கீழ் கதுருவல முஸ்லிம் கொலணி ஆக்ஸ்போர்ட் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி 2024 நிகழ்வு இடம் பெற்றது.
இலவசமாக பாடசாலை புத்தகப் பை மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் இன்னும்ஓர் நிகழ்வு பொல ன்னறுவை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக
தொழில் அதிபர்M.S.M.AARIF-கதுருவல முஸ்லிம் கொலணி ஆக்ஸ்போர்ட் பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியை A.ASMIN ஷிபாதா மற்றும் ஆசிரியைகளான H.P.THUSARI RAJAPAKSHAS,.M.G.MADUSANI,N.L.B.K.KUMARASINHAN,.A.NIRMALA WASANTHI இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது 47 பாலர் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு குவைத்தில் இயங்கி வரும் எல்பி குரூப் மூலமாக இலவசமாக பாடசாலை புத்தகப் பை வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்த வருடத்தில் மாத்திரம் குவைத் நாட்டில் இயங்கி வரும் LB GROUP இதுவரையில் சுமார் 647 இக்கு மேற்ப்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகப் பை வழங்கி உள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
ALSO READ | வாழைச்சேனையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் இதன் போது ஆடல் பாடல் உள்ளிட்ட கழை நிகழ்ச்சிகள் குழுவாகவும் சிறார்களின் தனி நிகழ்ச்சிகளாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.