• முகப்பு
  • இலங்கை
  • படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள்.

படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள்.

செ.சீனிவாசன் 

UPDATED: Jun 12, 2024, 2:31:04 PM

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் பெர்னாண்டோ விஜயகுமார் ஆகிய இரு மீனவர்கள் 10ம் தேதி பைபர் படகில் அனலை தீவிலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்

இவர்கள் வந்த படகு எஞ்சின் பழுதானால் திசை மாறி வேதாரணியம் அருகே ஆற்காடு துறை கடற் பகுதிக்கு வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவர் இலங்கை மீனவர்கள் இருவரையும் ஆற்காட்டு துறை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர் 

அனுமதி இன்றி வந்த இருவரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைது செய்து விசாரணை 

இரண்டு நாட்களாக கடல் தண்ணீர் குடித்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

 

VIDEOS

Recommended