• முகப்பு
  • இலங்கை
  • ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வை யிட்டார் கந்தசாமி பிரபு mp

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வை யிட்டார் கந்தசாமி பிரபு mp

எஸ்.எம்.எம்.முர்ஷித்

UPDATED: Nov 28, 2024, 6:54:40 PM

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சி.எம்.நியாஸ் ஹாஜியுடன் சென்று பார்வையிட்டார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கள் முகாமிற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சி.எம்.நியாஸ் ஹாஜியார் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களின் நலன் தொடர்பாக விசாரித்ததுடன்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் உதவிகள் குறித்து பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து பிரதேச செயலாளரிடம் கேட்டரிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்றும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை பிரதேச செயலாளரிடம் நன்றிகளை தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended