• முகப்பு
  • இலங்கை
  • வாசிப்பு மாத நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு

வாசிப்பு மாத நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு

ஏ.எஸ்.எம்.ஜாவித்

UPDATED: Nov 9, 2024, 10:52:54 AM

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வாசிப்பு மாத நிகழ்வுகளல் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இன்று 09 ஆம் திகதி சனிக்கிழமை வத்தளை நகர சபை கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் எம்.ஆர். மொஹிடீன் தலைமையில் சிறப்பாக நடை பெற;றது.

 மேற்படி நிகழ்வுக்கு பிரபல சமூக சேவையாளரும் ஜேஜே. நிருவனத்தின் உரிமையாளர் அல் ஹாஜ் டாக்டர் ஹனீப்  பிரதம அதிதியாகவும் பிரபல தொழிலதிபர் ஸீனத் டிரேடிங் கம்பெனி உரிமையாளர் அல் ஹாஜ் ஏ.எச்.எம். மாஹிர்  கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களும் கல்வியலாளர்கள், புத்தி ஜீவிகள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

original/img-20241018-wa0351_copy_640x640_1
கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பாடசாலை கல்வியறிவு சம்பந்தமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் க. பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை யும் கருத்தரங்குகளை யும் நடத்தி வருவதுடன் வத்தளை களனி மஹர சிங்கள தமிழ் முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளையும் நடத்தி வெற்றி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள், பரிசில்களை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின்போது வரவேற்புரையை எம்.கே.ஜூமாத் தலைமை உரையை எம்.ஆர்.மொஹிதீன் ஆகியோர் வழங்கியதுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற எம்.எஸ். ஐடா, பி. நேத்மி பெர்னாண்டோ, ஏ.டபிள்யு. ஒலிவியா ஜென்சி ஆகியோரின் பேச்சுக்கள், மருதானை ஸாஹிரா கல்லூரி ஆசிரியை சஸ்னா நளீம், சங்கத்தின் இணைச் செயலாளர் ஜே.ஆர்.எம். முஸம்மில் ஆகியோரின் விசேட பேச்சுக்களுடன் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளின் பேச்சுக்களும், பிர்தௌசியா அஹதிய்யா பாடசாலை மாணவிகளின் கஸீதா என்பனவும் இடம் பெற்றன.

original/img-20241022-wa0079_copy_219x294_1
இந்நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதி ஆகியோர் சங்கத்தின் உறுப்பினர்களால் நினைவுச்சி சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சங்கத்திற்கு பல்வேறுபட்ட சேவைகளை அயராது வழங்கி வரும் இணைச் செயலாளர் ஜே.ஆர்.எம். முஸம்மில் அவர்களுக்கு அதிதிகளால் விசேட பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். நன்றி உரையை ரி. இஸட். பக்கீர் அலி வழங்கினார்.

 

VIDEOS

Recommended