இலங்கையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குணங்குடி ஆர்.எம். அனிபா கவலை
அஷ்ரப்.ஏ.சமத்
UPDATED: Nov 30, 2024, 6:46:45 AM
இலங்கையில் புயல் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர் மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினரும், குணங்குடி ஆர்.எம். அனிபா திருப்பூர் சென்னையில் வெளியிட்ட செய்தி:
இலங்கையின் பல மாவட்டங்களில் புயல் மழையால் மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரை தீவு, மாவடிப்பள்ளி மற்றும் சம்மாந்துறை மதரஸா மாணவர்கள், உழவு இயந்திரத்தில் செல்லும் போது வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வேதனையினைப் பற்றி அறிந்து மிகவும் சோம்பலாக இருக்கின்றேன். உயிரிழந்தவர்களின் மறுமை வெற்றிக்காக பிரார்த்தனை செய்து, அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
இலங்கையில், வடமகானத்தில் மழையினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமுமுக தலைமை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன். தொடர்ந்து மழை பெய்வதால் இலங்கை மற்றும் தமிழ் நாடு உட்பட பிற இடங்களில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்கின்றேன்."