புத்தளத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் மாபெரும் கண்காட்சியும் மலிவு விற்பனையும்
ஏ. என். எம். முஸ்பிக்
UPDATED: Sep 6, 2024, 5:34:31 PM
புத்தளத்தில் சிறு கபுத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்னாள் அமைந்துள்ள நகர மண்டபத்தில் இன்றைய தினம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை யகத்தினால் கைத்தொழில் கண்காட்சியும் மலிவு விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச். எம். பி .பி ஹேரத் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பதில்துணைப் பணிப்பாளர் கயான் சமன்புர சில்வா அவர்களும் வருகை தந்தனர். அத்தோடு முஸ்லிம் பெண்கள் நம்பிக்கையகத்தின் தலைவி திருமதி ஹபீபா முஹம்மது ரிஸ்மி அவர்களும் நிர்வாகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜுவைரியா முஹைதீன் அவர்களும் புத்தளம் தெண்ணை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்கள், மேலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ,நிர்வாகிகள்அரசு அதிகாரிகள் பிரதிநிதிகள், சமய தலைவர்கள், சங்கங்களின் தலைவர்கள், இளைஞர்கள், ஊர்மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இக்கண்காட்சியில் ஈக்கிள்,சிரட்டை, பனை ஓலைகளினாலான பொருட்கள்,சவர்க்கார வகைகள்,திரைமுத்திரை அலங்கார பொருட்கள் , ஆடைவகைகள்,மூலிகைச் மற்றும் பூ செடிகள், உணவு வகைகள் இது போன்றபலபொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இறுதியாக இந்நிகழ்வில் கைத்தொழில் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெண்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.