முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அமீர் அலி வெள்ள பாதிப்புக் களை பார்வையிட்டார்
எஸ்.எம்.எம்.முர்ஷித்
UPDATED: Nov 29, 2024, 4:26:05 AM
கிழக்கு மாகாணத்தில் அசாதாராண சூழ்நிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகளை இன்றைய தினம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி MSS. அமீர் அலி பார்வையிட்டார்.
காவத்தமுனை இடைத்தங்கல் முகாமாக செயற்பட்டு வரும் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் பதுரியா, மாஞ்சோலை மற்றும் மீராவோடை பிரதேச மக்களையும் சந்தித்தார்.
அனர்த்த நிலைமைகளால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை நிலைமைகளை கண்கானித்து உரிய உதவிகளையும் ஒத்தாசைகளையும் வட்டாரக் குழுக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் தினங்களில் தேவையான உதவிகளை செய்து தருவதாகாவும் தெரிவித்தார்.
மேலும் பலத்த காற்று மற்றும் வெள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு அனைவரும் இயன்றவரை பாதுகாப்பாக இருக்குமாறும் தயவுடன் கேட்டுக்கொண்டார்.