• முகப்பு
  • இலங்கை
  • முன்னாள் நிதியமைச்சர் நினைவு முத்திரை மற்றும் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் வெளியீடும்

முன்னாள் நிதியமைச்சர் நினைவு முத்திரை மற்றும் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் வெளியீடும்

அஷ்ரப். ஏ. சமத்

UPDATED: Jul 28, 2024, 5:52:47 AM

முன்னாள் நிதியமைச்சர் மர்ஹும்  எம். எம். முஸ்தபா அவர்களின் நினைவு முத்திரையும், அவரது பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூலும் வெளியீடு.

original/inshot_20240728_110207427
நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் மர்ஹும் அல்ஹாஜ். எம். எம். முஸ்தபா அவர்களின் நினைவாக அன்னாருக்கு நூறு வயதையடைந்திருக்கும் இத்தருணத்தில் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் வண்ணம் தபால் திணைக்களம் நினைவு முத்திரையும் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அவரது குடும்ப உறுப்பிணர்கள் மற்றும் ஜனாதிபதி மற்றம் அரசியல்வாதிகள் அடங்கிய உரைகள் நுாலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இவ் வைபவத்தினை முஸ்தபா பௌன்டேசன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முஸ்தாவின் புதல்வர்கள், புதல்விகள், மற்றும் பேரப் பிள்ளைகள் அடங்கிய முஸ்தபா பௌன்டேசனால் இவ் வைபவம் எற்பாடு செய்யப்ட்டிருந்தது.

 ஜனதிபதியின் சார்பாக பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன ,நிதி யமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, பவித்ரா வண்னியராச்சி, வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர்களான வஜிர அபேவர்த்தன, பைசால் காசீம் உட்பட முஸ்தபாவின் குடும்ப உறவினர்கள் பல நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர்.

இங்கு முஸ்தபா பற்றிய பிரதான உரையினை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸ் ,ஆற்றினார்.

 முன்னாள் அமைச்சர் முஸ்தபா சார்பாக நவாஸ் முஸ்தபா மற்றும்  கலாநிதி செஹான் முஸ்தபாவும் உரையாற்றினார்கள்.

முதல் தபால் உரைய அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் பிரதம மந்திரிக்கு கையளிக்கப்பட்டு குடும்ப உறுப்பிணர்களுக்கு வழங்கப்பட்டது. 



 

VIDEOS

Recommended