• முகப்பு
  • இலங்கை
  • இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஷின் நிகழ்வுகள்

இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஷின் நிகழ்வுகள்

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Aug 4, 2024, 3:45:31 AM

இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தின நிகழ்வில், முஸ்லிம் ஊழியர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் மாணவர்களாகவும், புலமைப்பரிசில் பெற்றவர்களாகவும் மஜ்லிஸ் மூலம் பாராட்டப்பட்டனர்.original/dofoto_20240804_090841787
மேலும், துறைமுக அதிகார சபையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற முஸ்லிம் ஊழியர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

மஜ்லிஸ் தலைவர் இல்ஹாம் மசூர் மௌலானா தனது உரையில், "மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் இளைஞர் யுவதிகளுக்கு இலங்கை துறைமுக அதிகார சபையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கினார். அதன் மூலம் நாம் வாழ்வை சீராக நடத்தி, எங்கள் பிள்ளைகள் கொழும்பு மற்றும் பிற இடங்களில் உயர் கல்வி கற்று, பொறியியலாளர்கள், வைத்தியர்கள் போன்ற துறைகளில் பட்டம் பெற்றனர்.

 அவரின் பணி மூலம் கிடைத்த இளநிலை வாய்ப்புகள் கடந்த 24 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு மீண்டும் கிடைக்கவில்லை," என்றார்.

மேலும், "மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவாக புலமைப்பரிசில் திட்டத்தை கடந்த 4 ஆண்டுகளாகவும், அவர் தொடங்கிய துறைமுக இப்தார் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறோம்," என்றார்.

இந்த நிகழ்வு 03.08.2024 அன்று கொழும்பில் உள்ள தபால் திணைக்கள கூட்ட மண்டபத்தில் மஜ்லிஸ் தலைவர் இல்ஹாம் மௌலானா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை துறைமுக அதிகார சபையின் ஊழியர் ஒலிபரப்பாளர் திக்குவலை சும்ரி நெறிப்படுத்தினார்.

பிரதம பேச்சாளர்களாக முன்னாள் பா.உ ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகைர், பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்டீன், முன்னாள் புனர்வாழ்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எம். நஹியா, முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் மற்றும் 300க்கும் மேற்பட்ட துறைமுக முஸ்லிம் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended