கொழும்பில் உள்ள மக்களுக்கு அவசர செய்தி - நீர்வழங்கள் சபை

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Jun 12, 2024, 6:21:41 PM

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து, கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை. இது முற்றிலும் பொய்யானவை என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மறுப்புத் தெரிவித்துள்ளது.

முறையான சுத்திகரிப்புப் பணிகளின் பின்னரே மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும் சபை விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பில் சபை மேலும் விளக்கமளித்துள்ளதாவது, 

சுத்திகரிப்புக்குப் பின்னர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புக்கு வழங்கப்படும் தண்ணீர், தொடர்ந்து ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. இதற்கமைவான, பரிசோதனை முடிவுகளின்படி, நுண்ணுயிரியல் சோதனைகள் மற்றும் அனைத்து இரசாயன சோதனைகளும் தண்ணீரில் மேற்கொள்ளப்படுகின்றன.

   இலங்கைத் தர நிலையின் படி, தண்ணீரில் எந்த விதமான நோய்க் கிருமிகளோ அல்லது தொற்றுகளோ இல்லை என்பதை உண்மைப்படுத்தி உறுதியளிக்கிறோம். எனவே, இது தொடர்பில் மக்கள் வீண் அச்சத்தைத் தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 

VIDEOS

Recommended