• முகப்பு
  • இலங்கை
  • வடக்கில் குடிநீர் விநியோகம் 4 சதவீதமாகக் காணப்பட்டது இன்று முதல் இது 40 சதவீதமாக உயர்வடைந்துள்ளது

வடக்கில் குடிநீர் விநியோகம் 4 சதவீதமாகக் காணப்பட்டது இன்று முதல் இது 40 சதவீதமாக உயர்வடைந்துள்ளது

அமைச்சின் ஊடகப்பிரிவு

UPDATED: Aug 3, 2024, 2:20:28 PM

வடக்கில் குடிநீர் விநியோகம் 4 சதவீதமாகக் காணப்பட்டது. இன்று முதல் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றபோது வடக்கில் குடிநீர் விநியோகம் 4 சதவீதமாகக் காணப்பட்டது. அது இக்குடிநீர் திட்டத்தின் மூலம் நேற்று முதல் இது 40 சதவீதமாக உயர்வடையும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்மைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

குடிநீர் அடிப்படை உரிமையாகும். அதை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, செலவு அதிகமாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் மக்களின் குடிநீர் தேவையை உறுதிப்படுத்த இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்.

நான் கடந்த வருடம் ஜனவரி 2023 ஆம் ஆண்டு இந்த அமைச்சை பொருப்பெடுத்தேன். இந்த அமைச்சை நான் பொருப்பெடுக்கும்போது, என்னிடம் ஒப்படைத்த அமைச்சிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு 2800 மில்லியன் நஷ்டத்தில் இயங்கியது.

 அதுமட்டுமில்லாமல் என்னிடம் மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் சொன்ன ஒரு விடயம் உங்களால இந்த அமைச்சை எடுத்து எந்த பிரயோசனமும் இல்லை என்றார்கள். ஆனால் தற்பொழுது இலாபம் ஈட்டும் அமைப்பாக மாற்றியுள்ளேன். இதற்காக ஜனாபதி பொதுமக்கள் முன்னிலையில் என்னிடம் பாராட்டினார்.

ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றபோது வடக்கில் குடிநீர் விநியோகம் 4 சதவீதமாகக் காணப்பட்டது. இன்று முதல் இது 40 சதவீதமாக உயர்வடையும். இந்த திட்டத்துக்கு பல கிராமங்கள் காணிகளை கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் இந்த காணியை வழங்கிய தாளையடி கிராம மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கருத்துரைத்தார்.

 

VIDEOS

Recommended