• முகப்பு
  • இலங்கை
  • கண்டி மத்திய சந்தை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

கண்டி மத்திய சந்தை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

கண்டி நிருபர்.ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Aug 14, 2024, 2:33:18 AM

கண்டி மத்திய சந்தை உட்பட மற்றும் நகர எல்லைக்குட்பட்ட மாநகர சபை வர்த்தக கட்டிட ங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மத்தியமாகாண ஆளுநர் லலித் யூ கமகே   அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்குமிடையே இடம் பெற்றது.

கண்டியிலுள்ள ஆளுநர் காரியாலயத்தில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் கண்டி மத்திய சந்தை, புகையிரத நிலைய வீதி,வர்த்தகத் தொகுதி, டெலிகொம் பார்க் சந்தைக் கட்டிடம், மெனிக்கும்புற சந்தைக்கட்டிடங்கள், டொரிங்டன் சந்தைகட்டிடம் என்பவற்றின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். 

வர்த்தக நிலைய கட்டிங்களுக்கான கூலி, அதற்கான மதிப்பீட்டு முறைகள் போன்ற பல்வேறு அன்னறாடப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினர்.

இவை தொடர்பாக இரண்டு வார காலத்தில் தீர்வு பெற்றுத் தரப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து, ஆளுநரின் உதவிச் செயலாளர் உதார கொன்சிவத்த, மாநகர ஆணையாளர் இந்திகா அபேசிங்க உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended