• முகப்பு
  • இலங்கை
  • மாத்தளை மற்றும் தம்புள்ளை மாவட்டங்களில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் அபிவிருத்தி பணிகள்

மாத்தளை மற்றும் தம்புள்ளை மாவட்டங்களில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் அபிவிருத்தி பணிகள்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 24, 2024, 4:10:52 PM

மாத்தளை மற்றும் தம்புள்ளை மாவட்டங்களில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  தென்னகோன் தலைமையில் தொடர்ச்சியான அபிவிருத்தி விரிவாக்கங்கள்

23.06.2024 அன்று வரவுசெலவுத் திட்டம் மூலம் அரசால் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள சீமெந்து பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சி மற்றும் மலையக தசாப்த வேலைத்திட்டத்தில் அமுல்படுத்தப்படும் பாடசாலை அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல் தொடர்பான பல நிகழ்ச்சிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் தம்புள்ளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று (ஜூன் 23) நடைபெற்றது. 

original/inshot_20240624_213003895
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் நேரடித் தலையீடு மற்றும் பூரண மேற்பார்வையின் கீழ் தம்புள்ளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் இந்த அபிவிருத்தி விரிவாக்கங்களுக்கு தேவையான வளங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் தொழிலாளர் பங்களிப்புகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.

அதன்படி இன்று காலை லக்கல பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட பல விகாரைககளின் அபிவிருத்தி பணிகளுக்காக சீமெந்து விநியோகம் செய்யும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் வில்கமுவ ரணமுரேகம கனிஷ்ட கல்லூரியில் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் நட்புறவு வகுப்பறையின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவது, நாரங்கமுவ ஆரம்பப் பாடசாலையில் புதிய அலுவலகக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான இடப் பரிசோதனையை மேற்கொள்ளல், நாரங்கமுவ ஆரம்ப பாடசாலையில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தல், வேலங்கட்டிய ஏரிக்கு அருகில் உள்ள பாதையின் அபிவிருத்தி பணிகளை கண்காணித்தல், வில்கமுவ மினிபுர விஜய மகா வித்தியாலயத்தின் 02 ஆம் மற்றும் 06 ஆம் இலக்கம் மண்டபம்களை ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக அபிவிருத்தி செய்தல் மற்றும் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் பற்றிய ஆய்வுகள் மற்றும் வில்கமுவ மாஓயா கனிஷ்ட கல்லூரியில் ஆய்வு கூடத்தை புனரமைத்தல், மலசலகூட அமைப்பை சீர் செய்தல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் எதிர்காலத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மிகவும் பயனுள்ள வகையில் முன்னெடுப்பதற்கும் இராஜாங்க அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதன்போது பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

VIDEOS

Recommended