• முகப்பு
  • இலங்கை
  • கொழும்பு - சம்பந்தன் ஐயாவின் வழிகாட்டல்களில் சமாதானத்திற்கான கதவுகள் திறந்திருந்தன_ ரிஷாட் எம். பி.

கொழும்பு - சம்பந்தன் ஐயாவின் வழிகாட்டல்களில் சமாதானத்திற்கான கதவுகள் திறந்திருந்தன_ ரிஷாட் எம். பி.

Irshad Rahumathulla

UPDATED: Jul 4, 2024, 2:33:25 AM

தமிழ் தேசிய அரசியலை கெடுபிடிகளிலிருந்து காக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்த மிகச்சிறந்த மிதவாதி தலைவர் சம்பந்தன் ஐயா என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் ஐயாவின் மறைவையிட்டு அவர் வெளியிட்ட அனுதாபச் செய்தியில், 

விடுதலை அரசியலில் சிறுபான்மை சமூகங்களை சமநிலையுடன் அணுகியவர் சம்பந்தன் ஐயா. நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இவர், தமிழ் தேசிய அரசியலை மிகச்சாதுரியமாக வழிநடத்தினார்.

ஜனநாயகத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையால், கெடுபிடியான காலங்களிலும் தமிழ் தேசிய அரசியல் விலை போகாமல் பாதுகாக்கப்பட்டது. தொண்ணூறு வயதைக் கடந்திருந்தாலும் தீர்வைப் பெற வேண்டும் என்ற திடமான நிலைப்பாடு அவருக்கிருந்தது.

சிறுபான்மை சமூகங்களை சமபார்வையில் நோக்கிய பெருந்தகையும் இவர்தான். தமிழ், முஸ்லிம் முரண்பாடுகள் ஒரு மொழித் தேசியத்தை (தமிழ்) சிதைக்கக் கூடாதென்பதற்காக முஸ்லிம் தலைவர்களுடன் நல்லுறவை பேணி வந்தார்.

 

VIDEOS

Recommended