• முகப்பு
  • இலங்கை
  • அதிவிரைவாக கணக்குகளை சரி செய்வதன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த சிறுமி

அதிவிரைவாக கணக்குகளை சரி செய்வதன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த சிறுமி

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Sep 9, 2024, 2:13:03 PM

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியில் வசித்து வரும் பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகள் ஐந்து வயதும் பத்து மாதங்களுமான பள்ளி மாணவி செல்வி.காவ்யஸ்ரீ. 

original/dofoto_20240909_193533943_copy_1024x1024
இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்தார்.


இதற்கான நிகழ்வானது மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிரீன் கார்டன் ஹோட்டலில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

original/img-20240908-wa0053(1)
இதன் போது தனக்கு வழங்கப்பட்டிருந்த 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கான சரியான பதிலை 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் எழுதி சோழன் உலக சாதனை படைத்தார் சிறுமி காவ்ய ஸ்ரீ. 

இந்த நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றம் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.

சோழன் உலக சாதனை படைத்த சிறுமிக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவைகளை வழங்கிப் பாராட்டினார்கள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் இன்பராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட துணைத்தலைவர் வரதகரன் போன்றோர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை நிகழ்வின் முதன்மை விருந்தினராக மன்முனை வடக்கு பிரதேச செயலர் திரு.வ.வாசுதேவன் அவர்கள் பங்கு கொண்ட அதேவேளை நிகழ்வைத் தலைமேயேற்று நடத்தினார் கதிரவன் த.இன்பராசா அவர்கள்.

மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.ஜே.பிரபாகரன்,

இலங்கை UCMAS பணிப்பாளர் திருமதி. சித்ரா இளமநாதன் 

UCMAS மட்டக்களப்பு 

திரு.சி.சதீஸ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டனர்.

original/img-20240901-wa0081
கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப்புலவர் வி. ரஞ்சித மூர்த்தி,கதிரவன் பட்டிமன்ற பேரவையின் ஆலோசகர் கவிஞர் அன்பழகன் குருஸ், உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் திரு சா ஜெயராஜா, 

அகிலன் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் வி ஆர் மகேந்திரன், 

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கனடிய நாட்டிற்கான தலைவரின் தாயார் திருமதி பேரின்பம் பார்வதி, 

மட்டக்களப்பு கிரானில் அமைந்துள்ள பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மோசஸ் ஜேசுதாசன் மற்றும் அகிலன் பவுண்டேஷன் லண்டன் அமைப்பின் இணைப்பாளர் கலாநிதி வி ஆர் மகேந்திரன் போன்றோர் பங்கு கொண்டு சிறப்பித்தனர். 


கதிரவன் அமைப்பின் துணைத் தலைவர் சோலையூரான் ஆர் தனுஷ்கரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக கதிரவன் அமைப்பின் செயலாளர் கவிஞர் அழகு தனு அவர்கள் செயற்பட்ட அதேவேளை ஷர்மிளா சுப்பிரமணியம் அவர்கள் நன்றி உரை தெரிவித்தார். 

சோழன் உலக சாதனை படைத்த குழந்தை காவிய ஸ்ரீ அவர்களை அனைவரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

 

VIDEOS

Recommended