• முகப்பு
  • இலங்கை
  • இலங்கைக்கான பலஸ்தீன தூதுவருக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மே ளனத்தின் பிரியவிடை

இலங்கைக்கான பலஸ்தீன தூதுவருக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மே ளனத்தின் பிரியவிடை

ஏ.எஸ்.எம்.ஜாவித் 

UPDATED: Aug 20, 2024, 6:13:47 AM

இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் டொக்டர் சுஹைர் ஹம்டல்லாஹ் டார் ஸெய்ட் தனது பதவிக்காலம் முடிவடைந்து தனது நாட்டுக்கு செல்ல இருப்பதை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மே ளனத்தின் ஏற்பாட்டில் தூதுவரை கௌரவிக்கும் பிரியாவிடை வைபவம் ஒன்று சம்மேளனத்தின் தலைவர் சாம் நவாஸ் தலைமையில் நேற்று  கொள்ளுப்பிட்டி மென்டரினா ஹோட்டலில் இடம் பெற்றது.

original/asm-javid-media-(23)
இதன்போது வரவேற்புரையை சம்மேளனத்தின் தலைவர் சாம் நாவஸ் நிகழ்த்தினார்.

இலங்கை பலஸ்தீன் உறவுகள் தொடர்பான விசேட உரைகளை இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டின் இணைத்தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்காவும், ஊடகவியலாளரும் சமுகசேவையாளருமான மஹிந்த கட்டகே ஆகியோர் நிகழ்த்தினர்.

 

பிரதம அதிதியான பலஸ்தீன தூதுவர் டொக்டர் சுஹைர் ஹம்டல்லாஹ் டார் ஸெய்ட் இலங்கைக்கான தனது சேவை தொடர்பாகவும் இலங்கை மக்கள் தமது நாட்டு மக்கள் மீது வைத்துள்ள அன்பு, கருணை தொடர்பாகவும் தமது நாட்டு மக்கள் அநியாயமாக கொள்ளப்படுவதை நினைத்து கண்ணீர்மல்க தனது உரையை நிகழ்த்தினர்.

நன்றி உரையை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மெஹமட் அஜ்வடீன் வழங்கினார்.


இந்நிகழ்வில் சம்மேளனத்தின் அங்கத்தவர்களும், சட்டத்தரணிகள், சமுக சேவையாளர்கள், அரச மற்றும் தனியார்துறை உள்ளிட்ட பல முக்கிய பிரமுகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது சம்மேளனத்தினாலும் சம்மேளனத்தின் ஏனைய கிளைகளினாலும் தூதுவருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

VIDEOS

Recommended