• முகப்பு
  • இலங்கை
  • ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 560 குடும்பங்களை சேர்ந்த 1855 நபர்கள் பாதிப்பு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 560 குடும்பங்களை சேர்ந்த 1855 நபர்கள் பாதிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

UPDATED: Nov 28, 2024, 12:14:26 PM

 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 560 குடும்பங்களை சேர்ந்த 1855 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்த மழை குறைவடைந்துள்ளதுடன் வானம் மப்பும் மந்தாரமுமாகவே காணப்படுவதுடன் வெள்ள நீர் மட்டம்; குறைந்து செல்வதுடன் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தொடர்ந்தும் இடைத்தங்கள் முகாமிலும் உறவினர் நண்பர்கள் வீட்டிலும் வசித்து வருகின்றனர்.original/dofoto_20241128_173803743_copy_819x655
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகித நகர் கிராம சேவகர் பிரிவில் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 188 குடும்பங்களைச் சேர்ந்த 544 நபர்களும் உறவினர் நண்பர்கள் வீட்டில் மாஞ்சோலை, மீறாவோடை மேற்கு, மீறாவோடை கிழக்கு, ஓட்டமாவடி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் 372 குடும்பங்களைச் சேர்ந்த 1311 நபர்கள் தங்கியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தெரிவித்தார்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள் பிரதேச செயலகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரதேச தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

இன்று காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக மீறாவோடை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி றிஸ்வியா சஜ்ஜாத் தலைமையிலான குழவினரின் மருத்துவ முகாம் இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலவரங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தேவைகள் தொடர்பாக பிரதேச செயலாளர் ஏ.தாஹிரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளரின் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோத்தர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்.

 

VIDEOS

Recommended