• முகப்பு
  • இலங்கை
  • தேர்தல் பணிக்காக காவல்துறைக்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

தேர்தல் பணிக்காக காவல்துறைக்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 19, 2024, 4:45:36 AM

திறைசேரி இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தேர்தல் கடமைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்தார்.

 22 தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தல் தகராறு தீர்க்கும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், சுவரொட்டிகளை அகற்றுவதற்கும், தேர்தலின் போது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்கும், தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் செயல்களைத் தடுப்பதற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். 

original/img-20241018-wa0351
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருப்பதால், ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களை பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட ஆயிரத்து அறுநூற்று நாற்பத்தி ஒரு மில்லியன் ரூபாவில் ஆயிரத்து இருநூற்று முப்பது மில்லியன் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

original/img-20241018-wa0014

VIDEOS

Recommended