கூடோ தற்காப்புக் கலையை SDATல் இணைக்க கோரிக்கை.

JK

UPDATED: Sep 1, 2024, 2:11:57 PM

திருச்சி

6வது மாநில அளவிலான கூடோ போட்டிகள், மற்றும் 7வது மாநில அளவிலான பயிற்சி பட்டறைகள் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் நடைபெற்றது. 

இரண்டு நாள் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் தேசிய நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் கருப்புபட்டை காண பயிற்சி மேலும், விரைவில் நடைபெற உள்ள தேசியப் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

Breaking News

இதனைத் தொடர்ந்து நேற்று துவங்கிய 6வது மாநில அளவிலான போட்டியை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோஇருதயராஜ் துவக்கி வைத்தார். 

இந்த போட்டியில் திருச்சி, சேலம், சென்னை,நாமக்கல், திருவள்ளூர், தஞ்சாவூர், கோவை கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Latest Trichy District News 

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் விராங்கணைகளுக்கு திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பதக்கங்கள், சான்றிதழ் மற்றும் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் 32பதக்கங்கள் பெற்று முதலிடம் பெற்ற திருச்சி, 24 பதக்கங்கள் பெற்று 2ம் இடம் பெற்ற கோயம்புத்தூர், 22 பதக்கங்கள் பெற்று 3வது இடம் பெற்ற ஈரோடு, 17 பழக்கங்கள் பெற்று 4வது இடம் பெற்ற சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அணிகளுக்கு கேடயம் வழங்கினார்.

கூடோ விளையாட்டு

தொடர்ந்து வெற்றி பெற்ற வீராங்கனைகள் பல்வேறு சாதனைகள் பெற வாழ்த்து தெரிவித்தார்.

பயிற்சிபட்டறை மற்றும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின்பென்னி, செயலாளர் ஷேக்அப்துல்லா, இலக்கியா, காவியா ஆகியோர் செய்திருந்தனர்.

Sports News

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில பயிற்சியாளர் கந்தமூர்த்தி

மாநில அளவிலான கூடோ பயிற்சி பட்டறை மற்றும் போட்டிகள் நடைபெற்றது. இதில் 300க்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் நவம்பர் மாதம் 5ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு, படிப்புக்கு உண்டான போனஸ் மார்க்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசு

கூடோ தற்காப்பு கலையானது மினிஸ்டர் ஆஃப் யூத் ஆஃபரிஸ் அங்கமாக உள்ளது. மேலும் கேலோ இந்தியா போட்டிகளிலும் இந்த தற்காப்பு கலை இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கூடோ தற்காப்பு கலையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SDAT) இணைத்து அங்கீகாரம் வழங்கி மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும்.

அங்கீகாரங்களையும், போனஸ் மார்க் மற்றும் அரசு உதவிகளையும் கூடோ விளையாட்டு வீரர்களுக்கும் வழங்க வேண்டும் என இந்நேரத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக முதல்வருக்கும் கோரிக்கையாக வைக்கிறோம் என தெரிவித்தார்.

SDAT

VIDEOS

Recommended