- முகப்பு
- விளையாட்டு
- வடமாகாண 60 மீற்றர் இறுதிப் போட்டிக்குத் தெரிவானார் ரில்பி முகம்மது ரனா
வடமாகாண 60 மீற்றர் இறுதிப் போட்டிக்குத் தெரிவானார் ரில்பி முகம்மது ரனா
அரபாத் பஹர்தீன்
UPDATED: Aug 20, 2024, 6:27:07 PM
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சியில் இன்று (20) இடம்பெற்ற 12 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டி நிகழ்ச்சியில் தெரிவுச் சுற்றில் முதலிடம் பெற்று அசத்தினார் பொற்கேணி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் மாணவன் ரில்பி முகம்மது ரனா.
கல்வி அமைச்சின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வட மாகாணத்திற்கான போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அதில் இன்றைய தினம் (20) இடம்பெற்ற 12 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பொற்கேணி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்ற ரில்பி முகம்மது ரனா முதலிடம் பிடித்ததுடன் இறுதிப் போட்டிக்கும் தெரிவானார். நாளைய தினம் (21) இறுதிச் சுற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு