வட மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் வவுனியா மாணவி சாதனை

வவுனியா

UPDATED: Sep 5, 2024, 12:04:06 PM

2024 ஆம் ஆண்டு வடமாகாண மெய்வல்லுநர் போட்டிகளில் வவுனியா வடக்கு வலய பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார்.

அந்த வகையில் 20.08.2024ம் திகதி தொடக்கம் 24.08.2024ம் திகதி வரை யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான வடமாகாண மெய்வல்லுநர்

போட்டிகளில் வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த 14 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் பங்கேற்ற செல்வி சரனியா சந்திரகாசன் எனும் மாணவி குண்டு போடுதல் நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தினை பெற்றதோடு, 9.41மீற்றர் தூரம் எறிந்து வர்ணச் சான்றிதழுடனான புதிய சாதனையையும் பெற்று வடக்கு கல்வி வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையைச் சேர்த்துள்ளார். 

அத்துடன் அவர் தட்டெறிதல் நிகழ்ச்சியிலும் மூன்றாம் இடத்தினைப் பெற்றதோடு 14 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனை (Athletic Best Performer), 14 வயதின்கீழ் பெண்கள் பிரிவில் மைதானப் போட்டிகளில் சிறந்த வீராங்கனை (Field champions) என்ற இருவிருதுகளையும் பெற்று பாடசாலைக்கும் வடக்கு கல்வி வலயத்திற்கும் பெருமையைச்சேர்த்துள்ளார். 

original/img-20240901-wa0070

அத்துடன் இது பாடசாலை வரலாற்றில் கிடைத்த முதல் தங்கபதக்கமாகவும்

வர்ணச்சான்றிதழுடனான புதிய சாதனை என்பதும் பெருமைக்குரிய விடயமாக திகழ்கின்றது.

கிராமப்புற பாடசாலை ஒன்றில் கல்வி கற்று பல்வேறு பெரிய தேசிய பாடசாலைகளோடு

போட்டியிட்டு இம் மாணவி மிகப் பெரிய சாதனையை நிலைநாட்டி உள்ளார். இம் மாணவிக்கு

பயிற்சி வழங்கிய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் செல்வி. ஜெ.தட்சா மற்றும் ஆசிரியர் செல்வி

.ச.சக்தி ஆகியோருக்கும் அதிபர் பா.கேமலதன் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.



 

 

 

VIDEOS

Recommended