• முகப்பு
  • விளையாட்டு
  • தேசிய மல்யுத்தப் போட்டியில் அர்ஹம் சியாம் முதலிடம் டெவின் மெரிசான் 3ஆம் இடம்

தேசிய மல்யுத்தப் போட்டியில் அர்ஹம் சியாம் முதலிடம் டெவின் மெரிசான் 3ஆம் இடம்

அரபாத் பஹர்தீன்

UPDATED: Aug 12, 2024, 5:37:26 AM

தேசிய மல்யுத்த சம்மேளனத்தனால் திகன உள்ளக அரங்கில் இடம்பெற்ற மல்யுத்த (wrestling) போட்டியில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் அர்ஹம் சியாம் முதலிடத்தையும், நரக்கள்ளி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் டெவின் மெரிசான் 3ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

original/img-20240812-wa0043
கல்வி அமைச்சின் அனுசரணையில் தேசிய மல்யுத்த சம்மேளனத்தனால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்த போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கண்டி திகன உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றிருந்தது.

 இதில் வயதுப் பிரிவுகளுக்கு ஏற்பநிறைகள் மாறுபட்ட போட்டிகள் இடம்பெற்றிருந்தன.அதற்கமைய இத் தொடரில் கல்பிட்டி கோட்டக்கல்விப் பணிமனைக்கு உட்பட்ட நரக்கள்ளி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவம் செய்து 5 மாணவர்களும், நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவவம் செய்து ஒரு மாணவரும் பங்கேற்றிருந்தனர்.

அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 18 வயதுக்குட்பட்ட 60kg எடைப்பிரிவின் கீழ் போட்டியில் நரக்கள்ளி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் டெவின் மெரிசான் 3 ஆவது இடத்தினை தனதாக்கி தன் ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்திருந்தார். 

original/img-20240812-wa0046
பின்னர் இடம்பெற்ற 18 வயதுக்குட்பட்ட 71kg பிரிவின் கீழ் மல்யுத்த போட்டி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் அர்ஹம் சியாம் இலகு வெற்றியுடன் முதலிடம் பிடித்து தன் பாடசாலைக்கும், தன் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்திருந்தார். 

குறிப்பாக "நரக்களி மல்யுத்த கழகம்" என்ற பெயரில், முன்னால் இலங்கை தேசிய மல்யுத்த வீரரான லசந்த பெர்ணாண்டோ இவ்விரு பாடசாலை மாணவர்களுக்கும் மல்யுத்த பயிற்சிகளை வழங்கி வருகிறார். அத்துடன் இத் தேசிய ரீதியிலான வெற்றிக்கு மிக முக்கிய பங்குதாரரும், அவ் வெற்றியில் கொண்டாடப்பட வேண்டியவரும் பயிற்றுவிப்பாளர் லசந்த பெர்ணாண்டோ என மாணவவர்களும், இப் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியரும் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.



 

VIDEOS

Recommended