ஒட்டமாவடி சிறாஜ் அரபுக் கல்லூரிக்கு 2025ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எம்.முர்ஷித்.
UPDATED: Oct 22, 2024, 1:33:25 PM
இஸ்லாத்தின் வழிகாட்டல்களை ஆழமாகக் கற்று சன்மார்க்க விழுமியங்களின் அடிப்படையில் வாழும் சிறந்த ஆலிம்களை உருவாக்கும் இலட்சிய பணியில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வரும் ஓட்டமாவடி சிறாஜ் அரபுக் கல்லூரியில் 2025ம் கல்வி ஆண்டிற்கான ஷரீஆ மற்றும் மனனப் பிரிவுகளில் புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
01. *ஷரீஆப்பிரிவில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்,*
15 வயதுக்குட்பட்டவராகவும், 2025 இல் தரம் 09ல் கல்வி கற்பவராகவும், அல்குர்ஆனை சரளமாக ஓதக் கூடியவராகவும், சிறந்த தேகாரோக்கியம், நற்பண்புள்ளவராகவும் இருக்க வேண்டும்.
02. *மனனப்பிரிவில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்,*
13 வயதுக்குட்பட்டவராகவும், 2025 இல் தரம் 06ல் கல்வி கற்பவராகவும், அல்குர்ஆனை சரளமாக ஓதக்கூடியவராகவும், சிறந்த தேகாரோக்கியம், நற்பண்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
ஷரீஆப்பிரிவில் இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கு க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றுவதற்கான வகுப்புகள் இடம்பெறுவதுடன் ஏனைய அரசு பரீட்சைகளில் தோற்றுவதற்கான வாய்ப்பு, தொழில்நுட்ப பாடநெறிகள்(IT), தொழில்சார் கற்கை நெறிகள் என்பன இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேற்படி கல்லூரியில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு கூகுல் படிவத்தை பெற்றுக் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு - 0777379912
முகவரி :- அதிபர், சிறாஜ் அரபுக், மஜ்மா நகர், ஓட்டமாவடி.