• முகப்பு
  • ஆன்மீகம்
  • மன்னார்குடியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய ஹரித்திராநதி தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா.

மன்னார்குடியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய ஹரித்திராநதி தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா.

தருண் சுரேஷ்

UPDATED: Jun 23, 2024, 6:08:07 AM

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் தெப்பத் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் ஒவ்வொரு தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடத்தப்பட்டது இதன் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நேற்று இரவு நடத்தப்பட்டது.

ஆசியாவின் மிகப்பெரிய தெப்பக்குளமான ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் பிரம்மாண்டமான தெப்பம் கட்டப்பட்டது இதில் ருக்மணி சத்தியபாமா தாயார்கள் சமேதராக ராஜகோபாலசாமி எழுந்தருளினார் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார்.

அதனைத் தொடர்ந்து நாதஸ்வர இன்னிசை கச்சேரிகள் வான வேடிக்கைகள் முழங்க தெப்போட்டம் நடைபெற்றது நான்கு கரைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று கோபாலா கோவிந்தா என பக்தி பரவச முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். 

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.

 

VIDEOS

Recommended