பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உண்டியல் திறப்பு
முகேஷ்
UPDATED: Jun 27, 2024, 10:01:20 AM
கன்னியாகுமரி மாவட்டம், பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல்கள், 7 குடங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த உண்டியல்கள் 2 மாதம் ஒருமுறை எண்ணப்படும். குமரி மாவட்ட திருக்கோவில்களின் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் மற்றும் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்து வருகிறது.
அறங்காவலர் குழு உறுப்பினர்கள் துளசிதரன் நாயர், ராஜேஷ், நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், கண்காணிப்பாளர் சண்மும் பிள்ளை, கோயில் மேலாளர் செந்தில் குமார் உட்பட ஆகியோர் பங்கேற்றனர்.