• முகப்பு
  • புதுச்சேரி
  • பாஜக என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரியில் இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்.

பாஜக என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரியில் இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்.

சக்திவேல்

UPDATED: Mar 8, 2024, 7:15:54 AM

புதுச்சேரி முத்தியால்பேட்டை மாணவி ஆர்த்தி படுகொலையை கண்டித்தும் ,புதுச்சேரியில் போதை பொருள் விற்பனையை தடுக்காத ஆளும் என். ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசை கண்டித்தும் பந்த் போராட்டம் நடத்தப் போவதாக இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

Also Watch : N.Sree Radha advocate- Empowering Advocate Voice for the Well-being of Children's and Women's

அதன்படி இன்று காலை 7 மணி முதல் புதுச்சேரியில் பந்த் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் பிரதான சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, நேரு வீதி, காந்திவீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ஆதரவு கொடுத்து இருந்தனர்.

Also Read : கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி எஸ்.பி தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு.

மேலும் தனியார் பேருந்துகள், டெம்போக்கள், ஆட்டோக்கள், இயக்கப்படவில்லை, ஒரு சில அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது, மேலும் மாணவி படுகொலையை கண்டித்து சினிமா திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் இதனால் அனைத்து தியேட்டர்களிலும்பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது,

Also Read : கோயம்பேட்டில் டாஸ்மாக் ஊழியர் வெட்டபட்ட வழக்கில் கல்லூரி மாணவன் உட்பட 3 ரவுடிகள் கைது.

மேலும் அத்தியாவசிய பொருட்களை தவிர அனைத்து கடைகளும் புதுச்சேரியில் அடைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின, மேலும் கல்லூரி பள்ளி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கின, 

Also Read : நிலம் வீடு வாங்குவோருக்கு சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு.. உயர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு.

பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், குபேர் அங்காடி நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து மீன் வியாபார கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Also Read : போக்சோ வழக்கில் கைதாகி தப்பித்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு டீ மாஸ்டர் கைது.

மேலும் பந்த் போராட்டம் காரணமாக கடலூர், விழுப்புரம், திண்டிவனம், சென்னை செல்லும் அனைத்து தனியார் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள்,

மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பேருந்துகள் மாநில எல்லையான கோரிமேடு காலப்பட்டு மற்றும் கன்னி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

Also Read  : நாசர் தொகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக நிதி வருகிறது பெரிய இடத்து தொகுதி என்பதால் நாங்கள் கண்டு கொள்வதில்லை - திமுக எம்எல்ஏ.

பந்து போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பந்த் போராட்டத்தின் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Also Read : உதகையில் 9 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அஜித் என்பவனுக்கு 32 ஆண்டுகள் சிறை.

VIDEOS

Recommended