விஜயதாச ராஜபக்ஷவின் தேசிய முஸ்லிம் விவகார இணைப்பாளரும்,வவுனியா சிறைச்சாலை மேற்பார்வை குழுவின் தலைவருமான தொழிலதிபர் சிராஜூதீன் நிப்ரஸ் தலைமையிலான குழுவினர் சஜிதுக்கு ஆதரவு
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Sep 18, 2024, 11:35:39 AM
முன்னாள் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சரும்,தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான விஜயதாச ராஜபக்ஷவின் தேசிய முஸ்லிம் விவகார இணைப்பாளரும்,வவுனியா சிறைச்சாலை மேற்பார்வை குழுவின் தலைவருமான தொழிலதிபர் சிராஜூதீன் நிப்ரஸ் தமது ஆதரவாளர்களுடன் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்,ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அவருடன் இன்று இணைந்து கொண்டனர்.
கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த தகவலை சிராஜூதீன் நிப்ராஸ் வெளியிட்டார்.
மேலும் இதன் போது அவர் கருத்துரைக்கையில் -
நாம் வன்முறையற்ற கலாச்சாரத்தை விரும்பும் பிரஜைகள்.வன்முறைக்கு தூண்டுகின்ற வன்முறை கோட்பாடுகளை கொண்ட கொள்கைகாரர்களை எம்மால் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.
தேர்தலில் சகல சமூகங்களையும் இணைத்து,சகல சமூகங்களுக்கிடையில் நல்லிணகத்தையும்,ஒற்றுமையினையும் ஏற்படுத்தக் கூடிய கொள்கை பிரகடனத்தை வெளியிட்ட தகுதியான ஒரு வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நாம் பார்த்தேம்.
சிறுபான்மை சமூகத்திற்காக அவர்களது உரிமைக்காகவும்,சுபீட்சத்துக்காகவும் சஜித் பிரேமதாச அவர்கள் முன்னின்று செயற்பட்டு வந்துள்ளார்கள்.
இந்த நாட்டில் இனவாதத்தை விதைத்து அதில் குளிர்காய்ந்தவர்களுக்கு மத்தியில் இன ஒற்றுமைக்கான ஆட்ச்சியின் அவசியத்தை சஜித் பிரேமதாச வலியுறுத்தி வந்துள்ளமையினால் இலங்கை பிரஜைகள் என்ற வகையில் இந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கு தார்மீக பொறுப்பிருக்கின்றது.சஜித் பிரேமதாசவை ஆதரிக்க.
எனவே இன்னும் சில தினங்கள் எஞ்சியுள்ள நிலையில் நாட்டு மக்கள் குறிப்பாக வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ்,முஸ்லிம்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து இந்த நாட்டை மீண்டுமொரு இனவாதம் கொண்ட நிலையினை தோற்றுவிக்க முனையும் சக்திகளுக்குஅடிபனியாமல் தகுந்த பாடத்தை புகட்ட ஒன்றித்து சஜித் பிரேமதாசவை ஆதிரிக்க வேண்டும் என இந்த ஊடக சந்திப்பின் மூலம் அனைத்து மக்களிடமும்கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன் என்றும் கொழும்பை மையமாக கொண்டு தமது சமூக பணியினை முன்னெடுத்துவரும் சிராஜூதீன் நிப்ராஸ் மேலும் தெரிவித்துள்ளார்.