தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த பொய்யான புகாரில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைதா ?

சுரேஷ் பாபு

UPDATED: Feb 26, 2024, 8:43:06 PM

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் எம். கே. ரமேஷ். இந்த உளுந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எக்விடாஸ் என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை தொழிற்சாலைக்கான அனுமதியோ கட்டிடம் கட்டுவதற்கான உரிமமோ பெறாமல் தொழிற்சாலைக்கான வரியை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

Also Read : ராமாபுரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன்கள்.

இந்நிலையில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரான எம்.கே.ரமேஷ் பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த நான்காண்டுகளாக வரியை செலுத்த கோரியும், கட்டிட வரைபட அனுமதி பெற வேண்டும் என பலமுறை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் கடந்த 25.1. 2024 அன்று தொழிற்சாலை எச்.ஆர் மேனேஜர் சின்ன முனியாண்டி என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து தலைவர் எம் கே ரமேஷிடம் பேசியுள்ளார்.

Also Read : கோயம்பேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்.

அப்போது தொழிற்சாலைக்கான வரி, கட்டிடம் கட்டுவதற்கான உரிமம் மற்றும் தொழிற்சாலை கட்டுவதற்கான உரிமம் ஆகியவற்றை பெற வேண்டும் என தலைவர் எம் கே ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இந் நிலையில் கட்டிட வரைபட அனுமதி மற்றும் தொழிற்சாலை உரிமம் வாங்க மாட்டோம் என்று சொன்னதுடன் தலைவர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் தொழிற்சாலை எச் ஆர் மேனேஜர் சின்ன முனியாண்டி என்பவர்.

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

இதுகுறித்து 25.1.2024 சம்பவம் நடைபெற்ற தினத்தன்று மப்பேடு போலீசில் ஊராட்சி மன்ற தலைவர் எம் கே ரமேஷ் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சம்பிரதாயத்திற்காக விசாரிக்கவும் செய்யாமல் இன்று திடீரென தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் ஏ.எஸ்.பி விவேகானந்தா சுக்லா தலைமையிலான போலீசார் காலை 9 மணி அளவில் வீட்டில் இருந்த ஊராட்சி மன்ற தலைவர் எம்கே ரமேஷை வலுக்கட்டாயமாக கைது செய்து தனியிடத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

இதனிடையே 12 மணி நேர விசாரணைக்கு பிறகு இரவு பத்து மணி அளவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்பரிசோ தனைக்காக போலீசார் அழைத்து வந்தபோது ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் இதனை சிறிதும் கண்டுகொள்ளாத காவல்துறையினர் மாவட்ட குற்றவியல் நடுவர் எண் 2-ல் நீதிபதி ராதிகா முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

Also Read : எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து புழல் மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார். இதனால் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended