ராமாபுரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன்கள்.
சுந்தர்
UPDATED: Feb 26, 2024, 7:05:52 PM
ராமாபுரம் திருமலை நகர் பகுதியில் ராமாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?
இதையடுத்து போலீசார் விரட்டி சென்று மூன்று பேரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது பிடிபட்ட நபர்கள் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் 20, திருவாரூரைச் சேர்ந்த கஜேந்திரன் 20, ராமாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 18 என்பது தெரிய வந்தது.
Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்
மேலும் விசாரணையில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டதும் இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக செல்லும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்தது.
மேலும் இவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.