கோயம்பேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்.
S.முருகன்
UPDATED: Feb 26, 2024, 7:14:04 PM
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து கோயம்பேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது
இதையடுத்து போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் பாடியை சேர்ந்த பாபு(24), திருவண்ணாமலையைச் சேர்ந்த வாசுதேவன்(22), என்பதும் நெற்குன்றம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வாட்ஸ் அப்பில் குழு உருவாக்கி அதன் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?
இவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.