திருவேற்காடு கோவிலில் அரசு பள்ளி மாணவர்களை சாப்பிட்ட இலைகளை எடுக்க வைத்து டேபிள்களை சுத்தப்படுத்திய அவலம்.
S.முருகன்
UPDATED: Feb 15, 2024, 6:49:21 PM
சென்னை அடுத்த பிரபல திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கீழ் செயல்படுகிறது.
இந்த கோவிலில் ஆகம முறைப்படி கடந்த 2018 ஆம் ஆண்டு கொரனோ காலத்தில் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் நடக்காததால் தற்போது அதனை நடத்துவதற்கான முதல்கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று தற்போது வருகிறது.
அதன்படி கருவறையைய் சுமார் நான்கடி உயரம் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதற்க்காக மூலவர் அம்மனை பாலாலயம் செய்து அருகிலேயே புதிதாக கட்டப்பட்டுள்ள தற்காலிக தனி சன்னிதியில் மூலவர் அம்மனை பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்பு பூஜைகளும் யாகங்களும் செய்யப்பட்டு வந்த நிலையில்
தற்போது மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும் செய்யப்பட்டு லகு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதில் எரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ,அறங்காவர் குழு தலைவர்,அறங்காவலர்கள் ,கோவில் நிர்வாகிகள் ,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் ஆனது சுமார் 1000 பேருக்கு வழங்கப்பட்டது.
அப்போது இலை போட்டு உணவு பரிமாற திருவேற்காட்டில் செயல்படும் அரசு பள்ளி மாணவர்கள் 30 க்கும் மேற்ப்பட்வர்களை அழைத்து வந்து உணவு பரிமாற வைக்கும் வேலையானது கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு மாணவர்களும் இலை போடுவது, சாதம் ,சாம்பார் ,வடை, பாயசம் ,தண்ணீர் ஊற்றி வைப்பது என தள்ளு வண்டியில் தள்ளி சென்று வழங்கினர்.
மேலும் கோவிலில் இதற்கொன ஊழியர்கள் அரசு சம்பளத்துடன் உள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களை வைத்து கோவில் நிர்வாகம் வேலை வாங்கியது ஒருபடி மேலே சென்று மாணவர்களை இலை எடுக்க வைத்து சாப்பிடும் டேபில்களை சுத்தம் செய்யும் அளவுக்கு வேலையானது வாங்கப்பட்டது.
இன்று பள்ளி உள்ள நிலையிலும் மேலும் முழு ஆண்டு ,பொது தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பள்ளியில் இருந்து மாணவர்களை படிக்க விடாமல் அழைத்து வந்து பள்ளி வேலை நாட்களில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்கள் இப்படி வேலை செய்ய கூடிய அவல நிலையானது ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் இந்து சமய நிலை அறநிலையத்துறைக்கு கீழ் செயல்படும் இந்த கோவிலில் பள்ளி வேலை நாட்களில் மாணவர்களை வகுப்பை புறக்கணிக்க வைத்து அழைத்து வந்து உணவு பரிமாற வைக்கும் வேலை செய்ததற்கு பெற்றோர்கள் மத்தியில் சர்சையையும் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு மாவடட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை தேவை எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.