• முகப்பு
  • இலங்கை
  • ஜனாதிபதியின் அக்ராசன உரையை செவிமடுக்க சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் சபைக்கு வரவில்லை

ஜனாதிபதியின் அக்ராசன உரையை செவிமடுக்க சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் சபைக்கு வரவில்லை

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Feb 7, 2024, 8:07:11 AM

பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவுடன் ஜனாதிபதியால் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, பாராளுமன்றத்தின் 5 வது கூட்டத்தொடர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், இன்று புதன்கிழமை (07) காலை 10.30க்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அக்கிராசனத்தில் அமர்ந்து, அக்கிராசன உரையை ஆற்றிக்கொண்டிருக்கும் வேளையில், அக்கிராசன உரைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், சபையிலிருந்து சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி  அணியினர் மற்றும் அரசாங்கத்திலிருந்து பிரிந்து வந்த  டலஸ் அணியினர்  வெளிநடப்பு செய்தனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன் ஆகியோர் அக்கிராசன உரை செவிமடுக்க பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

.இது தொடர்பில் எமது கிரேட் இந்தியா நியூஸ் மூவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பலன் அளிக்கவில்லை 

VIDEOS

RELATED NEWS

Recommended