- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவள்ளுர் அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்து மாணவனை மர்ம நபர் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுர் அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்து மாணவனை மர்ம நபர் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுரேஷ் பாபு
UPDATED: Mar 2, 2024, 8:15:10 PM
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஶ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை பள்ளி விடும் நேரத்தில் பள்ளிக்குள் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்த ஜல்லிமேடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் பார்த்திபனை மர்ம நபர்கள் கத்தியால் கை மற்றும் தலையில் பலத்த வெட்டி உள்ளனர்.
Also Read : செல்வ பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது காங்கிரஸ்-திமுக இடையிலான கூட்டணி உடைவதாக தான் தெரிகிறது.
மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் தாக்குவதை பார்த்த அதே பள்ளியில் பணி புரியும் பெண் ஊழியர் கூச்சலிட்டுக் கொண்டு அதனை தடுக்க முயன்றார்.
அப்போது பெண் ஊழியர் ஜெனிபரையும் அவர் வலது கையில் வெட்டியுள்ளனர்.
Also Watch : 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது இக்காட்சியை பார்க்கும் போது பழைய நினைவுகள் நமக்குள்ளே வந்து செல்கின்றது
பின்னர் அதிக அளவில் ஆட்கள் ஓடி வருவதை பார்த்தவுடன் இருசக்கர வந்த மர்மமாக தப்பியுள்ளனர்.
இதை அடுத்து மாணவனையும் பெண் ஊழியரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாள நகர் போலீசார் பள்ளி மாணவன் மற்றும் பள்ளி அலுவலகப் பெண் ஊழியர் ஜெனிஃபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி வளாகத்திற்குள் பள்ளி மாணவன் மற்றும் பள்ளி அலுவலக பெண் ஊழியர் வெட்டப்பட்ட சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் மாணவனை வெட்டி இருக்கலாம் அல்லது ஏதாவது முன் விரோத பகையால் வெட்டிருக்க கூடுமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி பதிவுகளை கொண்டு மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.