• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • போலீசார் பொய் வழக்கு போடுவதை நிறுத்த வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவன் மனைவி கலெக்டரிடம் மனு. 

போலீசார் பொய் வழக்கு போடுவதை நிறுத்த வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவன் மனைவி கலெக்டரிடம் மனு. 

சுரேஷ் பாபு

UPDATED: Mar 2, 2024, 7:10:09 AM

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மாங்காடு 3வது தெரு, ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் உமாபதி ( வயது 45). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும்,இரண்டு மகன்களும் உள்ளனர்.

Also Watch : மயிலாடுதுறை அருகே  ஐந்து ஆலயங்களின் கும்பாபிஷேகம்

இந்த நிலையில் கடந்த 4ம் தேதியன்று உமாபதி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சம்சுதீன் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அந்த சமயம் சம்சுதீனுக்கும் கார்த்திக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் என்பவரை சம்சுதீன் தள்ளிவிட்டு சென்றுவிட்டார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Also Watch : 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது இக்காட்சியை பார்க்கும் போது பழைய நினைவுகள் நமக்குள்ளே வந்து செல்கின்றது

இந்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்சுதீன் மற்றும் உமாபதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் 33 நாள் இருந்த உமாபதி மீண்டும் ஜாமினில் வெளியே வந்தார். இருப்பினும் போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு வரவைத்து அவர் மீது பொய் வழக்கு போட முயற்சி செய்து வருகின்றனர்.

இதனால் மன வேதனை அடைந்த ஆட்டோ டிரைவராக உமாபதி தன் மீது பொய் வழக்கு போடக்கூடாது என போலீசாரிடம் மன்றாடியும்,அவர்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

Also Watch : ஜாபர் சாதிக் விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்திப் பேசுவது வருத்தமளிக்கிறது -வீடியோ வெளியிட்டு இயக்குநர் அமீர் விளக்கம்

இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட உமாபதி தன் மனைவியுடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது உமாபதியின் மனைவி கண்ணீர் மல்க தன் கணவர் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தனது கணவரை இனி மேலும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என கண்ணீர் விட்டு கதறி அழுதார் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read : முப்படைகளில் ஒன்றான இந்தியன் ஆர்மியில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் வேலைக்கு சேர விண்ணப்பிக்கலாம்.

பின்னர் கணவன் மனைவி இருவரும் இது தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபுசங்கரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended