கொழும்பின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Jan 22, 2024, 6:11:05 AM
மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அபே ஜனபல சக்தி அல்லது எமது மக்கள் சக்தியின் தலைவர் சமன் பெரேராவும் சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்சியிலேயே இலங்கையின் தற்போதைய்ய நாடாளுமன்ற உறுப்பினர் பௌத்த பிக்குகளான அத்துரலியே ரத்தன தேரர் உள்ளதுடன் மற்றும் கலகொடஅத்தே ஞானசார ஆகியோரும் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.