இலங்கையின் முதலாவது AI ஐக் கண்டுபிடித்து சாதனை புரிந்த மீராவோடை அல் ஹிதாயா மாணவன் அன்வர் அப்னான் அஹமட்
ஓட்டமாவடி - எஸ்.எம்.எம்.முர்ஷித்.
UPDATED: Jan 20, 2024, 1:12:39 PM
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய த்திற்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் அன்வர் அப்னான் அஹமட் தனது 25வது கண்டுபிடிப்பாக Artificial Intelligence Voice Assistant ஐக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
இது இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு குரல் உதவியாளர் (Artificial Intelligence Voice Assistant) ஆகும்.
இதனை மூன்று மாத தொடர் முயற்சியின் பின்னர் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கும் அப்னான் அஹமட், இதன் பயன்கள் கல்வித்துறையில் மட்டுமன்றி, பல்வேறு துறைகளுக்கும் உதவக்கூடியதாக இருக்குமென நம்பிக்கை தெரிவித்தார்.