கல்லூரிக்குள் புகுந்து கழிப்பிடத்தை சுத்தம் செய்வது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த அதிமுக மகளிர் அணி செயலாளர்.
பரணி
UPDATED: Feb 14, 2024, 8:45:52 PM
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது.
இக் கல்லூரியின் முதல்வர் ஆர். சீனிவாசன் வாலாஜாபேட்டை போலீசில் கொடுத்த புகார் மனு தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பா. சீனிவாசன் வழக்கு பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாற்று அரசியல் கட்சியினர் கடந்த 8 ம் தேதி காலை 9 .08 மணிக்கு கல்லூரி முதல்வரும், ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் வருவதற்கு முன்பாக
------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
ராணிப்பேட்டை அதிமுக மாவட்ட மகளிர் செயலாளர் ராதிகா, சாந்தி மற்றும் 20 மகளிர்கள், 2 ஆண்கள் ஆகியோர் எந்த அனுமதியும் பெறாமல் கல்லூரிக்குள் புகுந்துள்ளனர்.
கல்லூரிக்கு பின்புறம் உள்ள பயன்படுத்தப்படாமல் இருந்த கழிப்பிடத்திற்குள் நுழைந்து சுத்தம் செய்வது போல வீடியோவாக எடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் .எம். சுகுமார் தூண்டுதலின் பேரில் செயல்பட்டதாக உள்நோக்கத்துடன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சொல்லாததை தெரியப்படுத்திய மாதிரி புகார் தெரிவித்து பேட்டியளித்து சமூக வலைதளத்தில் இதனை பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கல்லூரி மாணவிகள் எவரும் யாரிடமும் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை என கடிதம் அளித்துள்ளனர்.
------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
கல்லூரிக்குள் புகுந்து கழிப்பிடத்தை சுத்தம் செய்வது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த அதிமுக மகளிர் அணி செயலாளர்
கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை திணித்து வதந்தி பரப்பி உள்ளனர் எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் ராதிகா மற்றும் சாந்தி 20 மகளிர் , 2 ஆண்கள் ஆகியோர் மீது இரு பிரிவுகளின் 143, 447 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் வாலாஜாபேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.