உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பதுளை - ராமு தனராஜா
UPDATED: Feb 6, 2024, 7:18:50 AM
கொஸ்லந்த கலிபானவெல பகுதியில் பொக்கே எல்ல காட்டு பகுதியில்
நேற்று (05) பிற்பகல் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த யானை 20 முதல் 25 வயதுடையது எனவும் யானை உயிர் இழந்தமைக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை எனவும் ஹல்துமுல்ல வனவிலங்கு அலுவலகத்தின் வன விலங்கு அதிகாரி டெல்ஷன் பிரியதர்ஷன தெரிவித்தார்.
உயிரிழந்த காட்டு யானை தொடர்பில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர், ரண்டம்பே வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரி .பி.எம்.அகலங்க பினிடிய பிரேத பரிசோதனையை மேற்கொள்வதுடன், கொஸ்லந்த பொலிஸாரும் ஹல்துமுல்ல வனஜீவராசி அலுவலகமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரியதர்ஷன மேலும் குறிப்பிட்டார்