• முகப்பு
  • கல்வி
  • கல்விக்கான புரவலர் ஹாஷிம் உமரின் மற்றும் ஒரு சமூகப் பணி 

கல்விக்கான புரவலர் ஹாஷிம் உமரின் மற்றும் ஒரு சமூகப் பணி 

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Sep 1, 2024, 6:45:02 PM

இலங்கையிலும் அதுபோன்று தமிழ் பேசும் மக்கள் வாழும் உலகிலும் புரவலர் என்ற நாமத்திற்கு கருத்தினை வெளிப்படுத்தியவர் ஹாஷிம் உமர் என்றால் அது மிகையாகாது.

original/img_9166
புரவலர் ஹாசிம் உமர் இலக்கியவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் பல்வேறு ஊக்குவிப்புl செயல்பாடுகளை செய்து வரும் ஒருவர்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தக வெளியீடுகளில் முதல் பிரதிகளை பெற்று எழுத்தாளர்களுக்கு மன தைரியத்தையும் துணிச்சலையும் கொடுத்து வரும் ஒருவர் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

 இதற்கப்பால் மாணவர் சமூகத்திற்கு கணணியை பெற்று கொடுத்து அதன் ஊடாக உலகத்தை தொடர்பு கொள்ள வைக்கின்ற ஒரு திட்டத்தையும் அவர் தற்போது முன்னெடுத்து வருகின்றார்.

original/img_9205
அந்த வகையில் நான்காவது தடவையாக கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு கணணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

குறிப்பாக முதன் முறையாக சிங்கள மொழிச் சகோதர ஒருவருக்கும் இந்த கணினி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

original/img_9167
 புரவலர் ஹாசிம் உமர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேல், சமூக ஜோதிஎம். எம்.எம்.ரபீக், சமூக செயற்பாட்டாளர் ஷிபான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 



VIDEOS

Recommended