இந்து முன்னணி நிறுவனத்தலைவர் ராமகோபாலனின் 4ம் ஆண்டு நினைவு நாள்.

JK

UPDATED: Oct 16, 2024, 9:50:32 AM

திருச்சி

இந்துமுன்னணி நிறுவனத்தலைவர் ராமகோபாலன் கடந்த 2020ம் ஆண்டு கொரோனாதொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

1980ல் இந்து முன்னணி அமைப்பை துவக்கி தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவாகவும், மதமாற்றங்களுக்கு எதிராகவும், குரல் கொடுத்ததுடன் விநாயகர் சதுர்த்தியின்போது ஊர்வலங்களை நடத்தி வந்தார்.

இந்து முன்னணி ராமகோபாலன்

ராமகோபாலன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட திருச்சியில் குழுமணி அருகே சீராத்தோப்பு பாரதியார் குருகுலமையத்தில் நினைவு மணிமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்து முன்னணி நிறுவனத்தலைவர் ராமகோபாலனின் 4ம்ஆண்டு நினைவு குருபூஜையையொட்டி குழுமணி சாலையில்உள்ள அவரது நினைவிடத்தில் ஆத்மஜோதி பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. 

Latest Trichy District News Today In Tamil 

ராமகோபாலன் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ராமகோபாலன் நினைவிடத்தில் இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில் பெருந்திரளான இந்து முன்னணியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பாஜகவினர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended