• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்.

தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்.

சுரேஷ்பாபு

UPDATED: Nov 10, 2024, 8:04:10 AM

திருவள்ளூர் மாவட்டம்   

தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த முகாமினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான திருமதி ஜூலியட் புஷ்பா அறிவுறுத்தலின்படி,

தேசிய சட்டப் பணிகள் தினம்

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி நளினிதேவி தலைமையில் தாங்கி பொதுமக்களிடம் இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கமாக எடுத்து கூறி விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை வழங்கினார்.

அவருடன் சட்டப்பணி ஆணைக் குழுவின் வழக்கறிஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பொதுமக்களிடம் தேசிய சட்டப் பணி குழு வழங்கும் சட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended