• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு ஆளாகி வரும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி.

கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு ஆளாகி வரும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி.

L.குமார்

UPDATED: Jun 23, 2024, 7:29:12 AM

கும்மிடிப்பூண்டியில் உலக ஒலிம்பிக் தினத்தையொட்டி பாஜக சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்பு. போட்டியில் பங்கேற்ற 67 வயது முதியவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு.

கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு ஆளாகி வரும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கும்மிடிப்பூண்டியில் உலக ஒலிம்பிக் தினத்தையொட்டி பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்டத் தலைவர் நரேஷ் ஏற்பாட்டில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகா பெங்களூர் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

இந்த போட்டியை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பெண்கள் பிரிவில் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த அனுபிரியா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி ஸ்ரீ நிகிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

அதேபோல் ஆண்கள் பிரிவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுகுமார் முதல் இடத்தையும் பெங்களூர் சேர்ந்த நித்தின், கோவிந்தராஜ் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு போட்டியை நிறைவு செய்த 67 வயது நிரம்பிய மதுரை சேர்ந்த கோபால் பூங்கொத்து கொடுத்து சிறப்பிக்கப்பட்டார்.

 

VIDEOS

Recommended