வீடியோ & போட்டோ கலைஞர்கள் நலச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம்.

JK

UPDATED: Aug 14, 2024, 1:48:40 PM

திருச்சி

வீடியோ & போட்டோ கலைஞர்கள் நலச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் 11.8.24 அன்று திருச்சியில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் நடப்பு நிர்வாக தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் ஆண்டறிக்கை, செயலறிக்கை மற்றும் வரவு செலவு கணக்குகளை வாசித்தனர்.

தொடர்ந்து மூத்த உறுப்பினரும் தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் "தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பெயர்களை அறிவித்தார்.

வீடியோ & போட்டோ கலைஞர்கள்

தமிழ்நாடு போட்டோ , வீடியோ நலக்கூட்டமைப்பின் மாநில தலைவர் D.விஜயபாலன் முன்னிலையில் "புதிய நிர்வாகிகள்" பொறுப்பேற்றுக் கொண்டனர். 

புதிய நிர்வாகிகளாக ஒருங்கிணைப்பாளர்:

P.விநாயகம், மாவட்ட தலைவர் S.கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் S.N.ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர்:  R.லட்சுமிபதிராஜ், துணைத் தலைவர்கள் D.ஜான் பீட்டர், C.அண்ணாமலை, துணைச் செயலாளர்கள் S.சமாதான ஆண்டனி ராஜ், J.M.சந்தோஷ் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

 

VIDEOS

Recommended