தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தருண்சுரேஷ்

UPDATED: Sep 18, 2024, 7:14:50 PM

திருவாரூர் மாவட்டம் 

கோட்டூர் ஒன்றியத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் குறுவை அறுவடை நிலையில், சம்பா, தாளடி நெற்பயிர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலமாவது இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு 2023-2024 ஆம் ஆண்டு சம்பா நெல் பயிர் எள் பயிருக்கு இன்சூரன்ஸ் பெயரளவில் மட்டுமே அறிவித்துள்ளது

இதனை கண்டித்து பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி மறு ஆய்வு செய்து பயிர் காப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் அதிகாரிகளின் மெத்தன போக்கால் விடுபட்ட வருவாய் கிராமங்களுக்கும் இன்சூரன்ஸ் தொகையை அறிவித்திட வலியுறுத்தியும் மத்திய,மாநில அரசுகள் பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோட்டூரில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்களிடம் 2023- 24 ஆம் ஆண்டிற்கான பயிர் மற்றும் எள் பயிர்க்கு ஒரு மாதத்திற்குள் பயிர் காப்பீடு பெற்று தருவதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உத்தரவு அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

VIDEOS

Recommended