திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நான்கு சிங்கப் பெண்கள்.

சுரேஷ் பாபு

UPDATED: Aug 16, 2024, 1:40:54 PM

திருவள்ளூர் 

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள் 2024-2025 ஆண்டிற்கான போட்டிகள் 09.08.2024 முதல் 11.08.2024 வரை வேலூர் VIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் யூத் ஜூனியர் சீனியர் பிரிவுகளுக்கான போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றன

இதில் திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு ஜூனியர் மற்றும் சீனியர்பிரிவில் 71 கிலோ பிரிவில்(2) தங்கம் வென்றார்.

பளுதூக்கும் போட்டி

காக்களூர் பகுதியில் வசிக்கும் திமுகவின் ஒன்றிய செயலாளர், காக்களூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சீலன் அவர்களின் மகள் சிவரஞ்சனி, சப் ஜூனியர் போட்டியில் மாநில அளவில் 81 கிலோ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

புட்லூர் பகுதியில் வசிக்கும் E tv செய்தியாளர் S. சுரேஷ்பாபு அவர்களின் மகள் S. ஜெனிடா ஜேயல்  ஜூனியர் பிரிவில் 49 கிலோ பிரிவில் மூன்றாவது இடம் பிடித்தார்.

மேல்நல்லாத்தூர் திருவிநாயகமூர்த்தி அவர்களின் மகள் ஓவியா அவர்களும் சப் ஜூனியர் பிரிவில் 45 கிலோ பிரிவில் மூன்றாவது இடம் பிடித்தார் தொழுவூர் பகுதியில் வசிக்கும் கருணாநிதி அவர்களின் மகள் ரக்க்ஷிதா.

 

இவர்களை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 

தொடர்ந்து நீங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள் என்றும் தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று நம் இந்திய தேசத்துக்கு நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Latest Sports News

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் பயிற்சியாளர், மற்றும் அர்ஜுனா விருது பெற்றவர், ஒலிம்பியன், பயிற்சியாளர் E. கருணாகரன், மற்றும் காக்களூர் (ஆக்டிவ் இந்தியா வெயிட் லிப்டிங் கிளப்) பயிற்சியாளர் R.பிரேம் ஆகியோர் கலந்து கொண்டனர்..

தொடர்ந்து அக்டோபர் மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய அளவில் நடைபெறும் பளுதூக்கும் போட்டியில் காக்களூர் சிவரஞ்சனி அவர்கள் கலந்து கொள்கிறார்.

 

VIDEOS

Recommended