தேனியில் புதிய கல்குவாரி அமைக்க கனிம வளத்துறை அனுமதி தரக் கிராம மக்கள் எதிர்ப்பு.

ராஜா

UPDATED: Jul 8, 2024, 2:13:11 PM

District News & Updates in Tamil

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளபுரம் கிராம பகுதியை சுற்றி கல்குவாரி, அமைந்துள்ளது இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகும், விவசாய விளைச்சல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்திருந்தனர்.

இந்த நிலையில் குள்ளபுரம் கிராமத்தைச் சுற்றி உள்ள பகுதியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்காக கனிமவளத்துறையில் விண்ணப்பம் வந்துள்ள நிலையில் இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Latest Thiruvallur News

கல்குவாரி அமைப்பதற்கு வந்துள்ள விண்ணப்பம் குறித்து கனிமவளத்துறையில் அனுமதி குறித்த பரிசீலனையில் உள்ள நிலையில் தங்கள் கிராமத்தில் கல்குவாரிகள் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Latest Theni District News

ஏற்கனவே இருக்கின்ற கல்குவாரிகளால் தங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்களின் விளைச்சல்களும் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி அளித்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படையும் என கூறி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

VIDEOS

Recommended