• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மத்திய அரசு 3 சட்டங்களின் பெயரை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றம் செய்வதைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு 3 சட்டங்களின் பெயரை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றம் செய்வதைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம்.

ரமேஷ்

UPDATED: Jun 20, 2024, 1:51:34 PM

கும்பகோணத்தில் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வர சட்ட மசோதாவை தாக்கல் செய்தது,

தொடர்ந்து ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் செந்தில் ராஜன், பொருளாளர் ராஜா சீனிவாசன், துணைத் தலைவர் இளங்கோவன், முன்னாள் தலைவர்கள் ராஜசேகர், சங்கர், மூத்த வழக்கறிஞர்கள் சக்கரபாணி, கலியபெருமாள், ஜெயராமன் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நீதிமன்ற புறக்கணிப்பு செய்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended