- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மின்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்.
மின்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்.
ஜெயராமன்
UPDATED: Jul 25, 2024, 12:52:25 PM
திருவாரூர் மாவட்டம்
தேமுதிக சார்பில் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தேமுதிகவினர் மின்சார கட்டண உயர்வு ரேஷன் கடையில் பொருள்கள் சரிவர வழங்காததை கண்டித்தும் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்தும் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் சண்முகராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணி துணை செயலாளர் ஏழுமலை சிறப்புரையாற்றினார்.
தேமுதிக
இந்த நிகழ்ச்சியில் சதீஷ்குமார் முன்னாள் மாவட்ட செயலாளர் முத்தையா மாவட்ட அவைத் தலைவர் வாசுதேவன் மாவட்ட பொருளாளர் சண்முகம் மாவட்டத் துணைச் செயலாளர் ஜெகதீசன் மற்றும் சசிகுமார் சதீஷ்குமார் ராணி ராஜி தலைமை செயற்குழு ராஜபாண்டியன் இளையராஜா ராஜசேகர் ஆறுமுகம் மற்றும் மாவட்டம் முழுவதிலிருந்தும் சுமார் 200 பேர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் முடிவில் கூத்தாநல்லூர் நகர கழக செயலாளர் அப்துல் காதர் நன்றியுரை ஆற்றினார்.