போலீசை போல் நாடகமாடி பெண்ணிடம் சுமார் 5 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு.

L.குமார்

UPDATED: Sep 19, 2024, 6:01:07 PM

கும்மிடிப்பூண்டியில் அடுத்த கோட்டக்கரை நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 45 வயது நிரம்பிய மதினா பீவி என்பவர் கோட்டக்கரையை ஒட்டியுள்ள கனி டிபன் கடையில் வீட்டிற்கு இட்டிலி பார்சல் வாங்கிக் கொண்டு செல்லும்போது போலீசாரை போல் மிடுக்காக நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் மதினா பீவியிடம் தங்களை போலீசார் என அறிமுகம் செய்து கொண்டு இப்பகுதியில் வழிபறிகள் அதிக அளவில் நடைபெறுவதால் தங்களின் கழுத்தில் உள்ள தங்க நகையை கழட்டிப் பையில் போட்டுக் கொண்டு செல்லுமாறு அறிவுரை வழங்கியதோடு, மதீனா பிபியின் கழுத்தில் இருந்த சுமார் 5 சவரன் தங்க நகையை கழட்டி ஒரு பேப்பரில் பொட்டலமாக மடித்து கொடுத்து அனுப்பியுள்ளனர். 

Latest Crime News Today

மேலும் அந்த கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி வேகமாக சென்றுள்ளது. தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற மதினா பீவி 

பையைத் திறந்து பொட்டலத்தை பிரித்துப் பார்த்தபோது பொட்டலத்தில் தங்க நகைக்கு பதிலாக சிறு சிறு கற்கள் இருந்துள்ளது.

இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவம் நடந்த கோட்டை கரை பேருந்து நிலையம் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் இது தொடர்பாக 2 தனிப்படைகளை அமைத்த நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்ததாக கூறப்படுகிறது.

பட்டப் பகலில் அரங்கேறிய இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிரிவேடு காவல் நிலைய எல்லைகுட்பட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த மாதர்பாக்கம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் இதே பானியில் பெண்ணிடம் 4 சவரன் தங்க நகை பறிக்கப்பட்டதும், அந்த குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாததும் குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended